தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மணிரத்னத்தின் குரூப்பில் இணைந்த விக்ரம் பிரபு..! - மணிரத்னம்

இயக்குநர் மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தனசேகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்திற்கு ‘வானம் கொட்டட்டும்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

1

By

Published : Mar 19, 2019, 11:03 PM IST

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் தனசேகரன். இவரது இயக்கத்தில் `படைவீரன்’ என்ற படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் புதிய படத்தை இயக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.

இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம், தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு, ‘வானம் கொட்டட்டும்’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். சரத்குமாரும், அவருடைய மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமாரும் ஜோடியாக நடிக்கிறார்கள். படத்தில் இருவரும் கணவன்-மனைவியாகவே நடிக்க இருக்கிறார்கள்.

படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்கி சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற இருக்கிறது. இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details