தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாலிவுட்டில் படம் இயக்கும் 'காலா' இயக்குநர்! - பிர்ஸா முண்டா வாழ்க்கை வரலாற்று படம் குறித்த அப்டேட்

இயக்குநர் பா. இரஞ்சித் இந்தியில் இயக்கயிருக்கும் புதிய வரலாற்று படத்தின் அப்டேட்டை படக்குழு தற்போது அறிவித்திருக்கிறது.

update on Birsa Munda biopic directed by Pa Ranjith

By

Published : Nov 25, 2019, 12:58 PM IST

பல நாட்களுக்கு முன் இயக்குநர் பா. இரஞ்சித் தான் இயக்கப்போவதாக அறிவித்திருந்த, சுதந்திரப் போராட்ட வீரர் பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த அப்டேட் சமீபத்தில் வெளி வந்துள்ளது. இப்படம் இந்தியில் வெளிவருவது மட்டுமல்லாது, பல மொழிகளிலும் வர இருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.

இப்படத்தினை ஷரீன் மன்த்ரி கேடியா தயாரிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு முதல் தொடங்கி நடக்கும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

இப்படத்தை நமாஹ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் இணைத் தயாரிப்பாளர் கிஷோர் அரோரா,' படத்தின் கதை தற்போது உருவம் பெற்று வருவதாகவும்; கதையை ஆராய்ந்து எழுதி முடிக்க, எட்டு மாதங்களுக்கும் மேல் ஆனதாகவும்' தெரிவித்தார். இதன் காரணமாகவே படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் தற்போது இந்தியில் எடுக்கப்படும் படத்தின் மீது தான், படக்குழுவின் கவனம் இருப்பதாக கூறிய தயாரிப்பாளர், படத்தின் கதைத் தயாரானதும் மற்ற மொழிகளில் வெளியிடுவதைப் பற்றி அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.


இதையும் படிங்க: யாமினிகள் இருக்கிறார்கள். மயக்கம் என்ன? நன்றி செல்வராகவன்.... #8YearsofMayakkamEnna

ABOUT THE AUTHOR

...view details