கரோனா ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரும் 15ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இருப்பினும், தயாரிப்பாளர்கள் பலரும் தங்களது திரைப்படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக இம்மாதம் மற்றும் தீபாவளி விடுமுறையையொட்டி ஓடிடி தளத்தில் பல படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. எந்தெந்த படங்கள் வெளியாகிறது என்பதை கீழே பார்ப்போம்
- ஹலால் லவ் ஸ்டோரி (மலையாளம்) - அக்டோபர் 15ஆம் தேதி
- பீமா (கன்னடா) - அக்டோபர் 29ஆம் தேதி
- சூரரை போற்று - அக்டோபர் 30ஆம் தேதி
- சலாங் (இந்தி, தமிழ்) - நவம்பர் 13ஆம் தேதி
- மன்னே (கன்னடா) - நவம்பர் 13ஆம் தேதி
- மிடில் கிளாஸ் மெலோடீஸ்(தெலுங்கு) - நவம்பர் 20ஆம் தேதி
- துர்காவதி (இந்தி) - டிசம்பர் 11 ஆம் தேதி
- மாரா(தமிழ்) - டிசம்பர் 17ஆம் தேதி
- கூலி நம்பர் 1 (இந்தி) - டிசம்பர் 25ஆம் தேதி ஆகிய திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளன.