எகிறிய வெளிநாட்டு உரிமை - வலிமை படத்தை கைப்பற்றிய யுனைடெட் இந்தியா - h vinoth
சென்னை: வலிமை படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமை பெரும் விலைக்கு விற்பனையாகி உள்ளது.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை தொடர்ந்து அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி வருகிறார் ஹெச்.வினோத். நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது படுவேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை பெரிய தொகை கொடுத்து யுனைடட் இந்தியா எக்ஸ்போர்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை வந்த அஜித் படங்களிலேயே இதற்குதான் அதிக விலை என்றும் கூறப்படுகிறது.