'உணர்வுகள் தொடர்கதை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிடும் தனுஷ் - உணர்வுகள் தொடர்கதை
'உணர்வுகள் தொடர்கதை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை நடிகர் தனுஷ் நாளை வெளியிடுகிறார்.
!['உணர்வுகள் தொடர்கதை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிடும் தனுஷ் உணர்வுகள் தொடர்கதை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:37:34:1593000454-dhanus-2406newsroom-1593000385-625.jpg)
உணர்வுகள் தொடர்கதை
இயக்குநர் பாலு சர்மா இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் இகேஷ்க் நடிப்பில் உருவாகியுள்ள படம் உணர்வுகள் தொடர்கதை.
இப்படத்தில் ஹரிஷுக்கு ஜோடியாக ஷெர்லின் செத் நடிக்கிறார். இந்தப் படத்தை சமீர் பரத் ராம் தயாரிப்பில் சூப்பர் டாக்கீஸ் வெளியிடுகிறது. ஆமின் மிர்சா இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'கோபக்கனல்கள் தீராத' பாடலை நடிகர் தனுஷ் நாளை (ஜூன் 25) மாலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுகிறார்.