தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’வாத்தி கம்மிங்’- விஜய் பாடலுக்கு நடனமாடிய வெளிநாட்டு மக்கள் - latest tamil cinema news

சென்னை: பிரிட்டன் நாட்டு மக்கள் சிலர் மாஸ்டர் படத்தில் உள்ள ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளனர்.

வாத்தி கம்மிங்
வாத்தி கம்மிங்

By

Published : May 11, 2020, 3:03 PM IST

கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

அதிலும் குறிப்பாக ’வாத்தி கம்மிங்’ பாடலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் ரசிக்கின்றனர். மேலும் பலரும் இப்பாடலுக்கு நடனமாடி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரிட்டன் நாட்டில் இருக்கும் மக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து இப்பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளனர்.

அந்த வீடியோவை இசையமைப்பாளர் அனிருத்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க:பாலிவுட் சென்ற அசோக் செல்வன் திரைப்படம்!

ABOUT THE AUTHOR

...view details