தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மிஷ்கின் எனக்கு இரண்டு சாய்ஸ் கொடுத்தார் - உதயநிதி - உதயநிதி ஸ்டாலினின் சைக்கோ

சைக்கோ திரைப்படத்தில் மிஷ்கின் எனக்கு இரண்டு சாய்ஸ் கொடுத்தார் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Udhayanithi stalin
Udhayanithi stalin

By

Published : Jan 24, 2020, 10:06 PM IST

Updated : Jan 24, 2020, 11:01 PM IST

சைக்கோ படம் இன்று வெளியானதையடுத்து அப்படத்தில் நடித்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பிரசாத் லேப்பில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

பத்திரிக்கையாளரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

அப்போது அவர் கூறுகையில், சைக்கோ படத்தின் முதல் காட்சிக்கு மக்களிடம் நல்லவரவேற்பு கிடைத்துள்ளது. எனக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஓப்பனிங் கிடைத்தது. இதுக்கு காரணம் இயக்குநர் மிஷ்கின்தான். ரசிகர்களுடன் சேர்ந்து நான் படம் பார்த்தேன். நான் நினைக்காத இடத்திலெல்லாம்கூட கைதட்டல் கிடைக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த படத்தில் மிஷ்கின் எனக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுத்தார். ஒன்று சைக்கோவாக நடிப்பது. மற்றொன்று கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடிப்பது. நான் கண் தெரியாதவன் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்தேன். நடிகர் சங்கம் தேர்தல் வழக்கின் நீதிமன்ற தீர்ப்பு குறித்து தெரியாது. மீண்டும் தேர்தல் நடந்த முடிவு செய்தால் அதன் முடிவுகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தேர்தலை நடத்தவே வேண்டாம் என்றார்.

இதையும் வாசிங்க: தந்தை புத்தகத்துக்கு எழுந்த விமர்சனங்களை நினைவுபடுத்திய அமிதாப்

Last Updated : Jan 24, 2020, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details