சென்னை: ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவிற்கு நடிகர்கள், இயக்குநர்கள், எனப் பலரும் தங்களது ஆதங்கத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.
ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021: 'படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிக்கிறது'
தணிக்கையான படங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் மறு தணிக்கை செய்ய வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கலுக்கு வழிவகுக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
udhayanidhi
அந்த வகையில் நடிகரும் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021' படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிக்கிறது. தணிக்கையான படங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் மறு தணிக்கை செய்ய வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கலுக்கு வழிவகுக்கும். இந்த பாசிச போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்- உதயநிதி ஸ்டாலின்