உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள சைக்கோ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. மிஷ்கின் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பது பெற்றுள்ளது. இதையடுத்து இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது.
இந்த நிலையில் இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், "மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி விழாவில் கலந்துகொள்கிறேன். 'சரவணன் இருக்க பயமேன்' படத்திற்குப் பிறகு இப்போதுதான் பட விழாவில் அனைவரையும் சந்திக்கிறேன். இளையராஜாவால் இவ்விழாவிற்கு வர முடியவில்லை. படத்தில் மூன்று பாடல்களுக்கு சிறப்பான இசையைக் கொடுத்திருந்தார்.
'சைக்கோ-2 படம் கண்டிப்பாக வரும்' - உதயநிதி ஸ்டாலின் சைக்கோ படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக எடுக்கப்படும். இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தக் கதையையும், ஒரு எலி கதையையும் மிஷ்கின் என்னிடம் கூறியிருந்தார். ஆனால் அது எனக்குப் அப்போது புரியவில்லை. கண்ணே கலைமானே எனக்கு பிடித்தமான படம், இருந்தாலும் அந்தப் படம் வசூலில் பெரிதாகச் சாதிக்கவில்லை. தமன்னா நடித்த படத்தில் கவர்ச்சிக் காட்சிகள் ஏன் இல்லை என்று சிலர் கூறினார்கள்.
நான் கார் ஓட்டும்போது நித்யா மேனன் தைரியமாக இருந்தார். அவருடன் நடிப்பது சவாலானது. ஏனென்றால் அவர் இயல்பாக நடிக்கக் கூடியவர். நித்யா மேனன் சைக்கோ படத்தில் என்னைத் திட்டி கைத்தட்டல் வாங்கியிருப்பார், நான் அவரை அறைந்து கைத்தட்டல் வாங்கியிருந்தேன்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா' பட ட்ரெய்லர் வெளியீடு!