இந்தியாவில் கோவிட்-19 பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்ஒரு பகுதியாக நாளை பொதுமக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என மோடி வேண்டுகோள்விடுத்தார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திரைப்பிரபலங்கள் சிலர் ரசிகர்களுக்கு கோவிட்-19 குறித்து அறிவுரை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர்கள் சங்க பொதுச்செயலாளர் ஆர். வி. உதயகுமார் கோவிட்-19 குறித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “கரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையின் அடுத்தகட்டமாக பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி நாளை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் இருந்தபடியே மக்கள் ஊரடங்கு உத்தரவு என்ற சுயக்கட்டுப்பாட்டை அறிவித்துள்ளார்.