பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சார்பட்டா பரம்பரை' அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு வெளியானது.
குத்துச் சண்டையை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் ஆர்யாவின் நடிப்பு பலரையும் ஈர்த்துள்ளது. 'சார்பட்டா பரம்பரை' வெற்றிக்கு காரணம் படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் பா.ரஞ்சித் சரியாக பயன்படுத்தி உள்ளார் என ரசிகர்கள் கூறியுள்ளனர்.
இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகரும் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி 'சார்பட்டா பரம்பரை' படத்தைப்பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டியுள்ளார்.
அதில்," 70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ’சார்பட்டா பரம்பரை' முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் - கலைஞர் - கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது.
கபிலனாக அசத்தியுள்ள நண்பர் ஆர்யா, கழகத்துக்கார்-ரங்கன் வாத்தியாராக பசுபதி சார், டான்ஸிங் ரோஸ், வேம்புலி, ஜான் விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்துள்ள நண்பர் இயக்குநர் பா. ரஞ்சித்துக்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சார்பட்டா பரம்பரை: முகமது அலிக்கு ஒரு காதல் கடிதம்