'கத்துக்குட்டி' பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், 'உடன்பிறப்பே'. சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரித்துள்ள இப்படம் உறவுகளை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. 'உடன்பிறப்பே' படத்தின் ட்ரெய்லர் கடந்த 4 ஆம் தேதி வெளியாகியுள்ளது.
அண்ணனாக சசிகுமார் நடிக்க, தங்கை கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்திருக்கிறார். உறவுகளையும், விவசாயத்தைத் தழுவி இந்த படம் முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெயின்மெண்டாக உருவாகியுள்ளது.
'உடன்பிறப்பே' படத்தில் அண்ணனைப் பற்றி விவரிக்கும் பாடல் வெளியாகியுள்ளது. ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
இதையும் படிங்க:11 வருட காதல்... ஐந்தாண்டு இல்லறம்: முடிவுக்கு வந்த உறவு