பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளிவந்த கேஜிஎஃப் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கன்னட திரையுலகில் 100 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற கெளரவத்தையும் பெற்றது. இந்திய சினிமாவில் கோளாறு தங்க வயலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட முதல் படம் என்றால் அது 'ஜிஎஃப்' தான். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படத்தை விஜய் கிரகண்டுர் தயாரித்துள்ளார்.
'கேஜிஎஃப்' படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் - yash
2018ஆம் ஆண்டு வெளிவந்த 'கேஜிஎஃப்' படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. இதனை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
1970ல் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு, சமூகத்தில் விழிம்பு நிலையில் இருக்கும் இளைஞன் ஒருவன் சமூக சீர்கேடுகளையும், ஏற்ற தாழ்வுகளையும் தகர்த்தெறிந்து முன்னேறும் புரட்சிகரமான கதைக்களமாக வந்தது. இந்நிலையில், 'கேஜிஎஃப்' திரைப்படம் அதிரடி காட்சி அமைப்புகள் மற்றும் சிறப்புக் காட்சி ஆகிய இரு பிரிவுகளில் தேசிய விருதுகளை பெற்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தை தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம், தேசிய திரைப்பட விருதுகள் இயக்குனரகம், ஊடக நண்பர்கள், விநியோகஸ்தர்கள், திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்துள்ளது.