தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மயிலாப்பூரில் நடிகையை மிரட்டிய தந்தை-மகன் கைது - ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட நடிகை சுருதி

சென்னை: நடிகையின் தாயாரை மிரட்டியதாக தந்தை-மகனை காவலர்கள் கைது செய்தனர்.

Two arrested for threatening actress shruthi mother
Actress Shruthi

By

Published : Feb 29, 2020, 3:01 AM IST

சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் ரியல் எஸ்டேட் (வீடு, வீட்டுமனை) தொழிலில் ஈடுபட்டு வருவதுடன், குழந்தைகளுக்கான பொருள்களை விற்கும் கடையை நடத்தி வருகிறார்.

ஸ்ருதி

இவரது மகன் அமுதன் வெங்கடேசன். இவர் 2015ஆம் ஆண்டு மயிலாப்பூரில் நடிகை ஸ்ருதி படித்த போது, ஒருதலைப்பட்சமாக அவரை காதலித்துள்ளார்.

ஸ்ருதியை திருமணம் செய்து வைக்க அவர் தாயார் சித்ராவிடம் வற்புறுத்திய நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் ஸ்ருதியை திருமணம் செய்து வைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அமுதன் காணொலிக்காட்சி பதிவிட்டு மிரட்டல் விடுத்தார்.

Youth Threatening video demanding to marry Actress Shruthi

இதற்கிடையில் ஸ்ருதி மீது திராவகம் வீசப்போவதாக ராஜசேகரனும், அமுதனும் சென்ற 5ஆம் தேதி மிரட்டல் விடுத்துள்ளனர்.

Youth Threatening video demanding to marry Actress Shruthi

இதுதொடர்பாக ஸ்ருதியின் தாயார் சித்ரா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தந்தை-மகனை கைது செய்தனர்.

நடிகை ஸ்ருதி மற்றும் அவரது தாயார் மீது ஏற்கனவே திருமண மோசடி வழக்குகள் உள்ளது.

நடிகை ஸ்ருதி

இளம் நடிகையான ஸ்ருதி ஆடி போனா ஆவணி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.

ABOUT THE AUTHOR

...view details