தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ட்விட்டரை வண்ணமயமாக்கும் #sareetwitter சேலஞ்ச்

பெண்களால் முடியாதது எதுவும் இல்லை. அந்நத வகையில் #sareetwitter சேலஞ்ச் மூலம் உலகம் முழுவதும் உள்ள பெண்கள், அழகான புடவைகள் உடுத்தி அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு வண்ணமயமாக்கி வருகின்றனர்.

சேலஞ்ச்

By

Published : Jul 17, 2019, 10:36 PM IST

Updated : Jul 18, 2019, 5:04 PM IST

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டோ இல்லையோ ஆனால் பெண்கள் கட்டும் ஒவ்வொரு புடவைக்கும் பின்னாள் ஒரு சுவாரஸ்யம் மறைந்திருக்கிறது. அது பெண்கள் வாழ்வில் விலைமதிப்பற்ற மகிழ்ச்சியை தரும். கடந்த இரண்டு நாட்களாக உலக பெண்கள் அனைவரும் #sareetwitter சேலஞ்ச் மூலம் இணையத்தை ஆக்கிரமித்துள்ளனர். எந்தப் பக்கம் திரும்பினாலும் பெண்கள் புடவை கட்டி கொடுத்திருக்கும் போஸ்தான் ட்ரெண்டிங்காகி வருகிறது.

நிவேதா பெத்துராஜ்

கிகி சேலஞ்ச், பாட்டில் மூடி சேலஞ்ச், ஃபிட்னஸ் சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என பல்வேறு சேலஞ்ச்கள் தோன்றி மறைவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது #sareetwitter சேலஞ்ச் பெண்களுக்கு சவாலாக இருந்து வருகிறது. பெண்கள் புடவை கட்டினாலே அழகுதான். ஆனால் அவர்கள் கட்டும் புடவை எந்த அளவிற்கு ட்ரெண்டாவதுதான் போட்டியாக இருந்து வருகிறது. இந்த #sareetwitter சேலஞ்ச் அரசியல் பிரபலங்கள், நடிகைகள், பொதுமக்கள் சிறுவர்கள் வரை என அனைவரிடத்திலும் பிரபலமாகிறது.

இந்திய நாட்டு பெண்

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி 22 வருடத்திற்கு முன்பு திருமணத்தின்போது புடவை கட்டி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளி வருகிறார். நடிகை நக்மா, பிரியங்கா சோப்ரா, மாதுரி தீட்ஷித், தீபிகா படுகோனே என அனைவரது புகைப்படமும் ட்ரெண்டாகி வருகிறது. இதில் இந்திய கலாசாரம் காக்கப்பட்டாலும் வெளிநாட்டு அழகிகளும், அரசியல்வாதிகளும் ட்விட்டரில் புடவை சவாலில் இணைந்துள்ளனர்.

லாஸ்லியா

இதில், ஆர்டிக்கல் 15 பட நடிகர் ஆயுஷ்மான், ட்விட்டர் புடவை சவாலில் இணைந்து அனைவரையும் கவர்ந்து வருகிறார். பிக்பாஸில் இருக்கும் லாஸ்லியாவின் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Last Updated : Jul 18, 2019, 5:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details