சென்னை: 'வார்' படத்தை புகழ்ந்து தள்ளியிருக்கும் டிவி தொகுப்பாளர் பாவானா, அந்தப் படத்தில் நடித்த ஹிர்திக் ரோஷனை விந்து தானம் செய்வது பற்றி யோசிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழில் பிரபல தொலைக்காட்சி சேனலின் தொகுப்பாளராக திகழ்பவர் பாவனா. ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ள இவருக்கு தனியாக ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
இந்த நிலையில், கடந்த வாரம் வெளியான பாலிவுட் படம் 'வார்' என்ற படத்தை பார்த்துள்ள இவர், அதனை புகழ்ந்து தள்ளி ட்வீட் செய்துள்ளார்.
அதில், ஹைலைட்டாக 'வார்' படத்தில் ஹீரோவாக நடித்த ஹிர்திக் ரோஷனுக்கு விநோதமான கோரிக்கையும் வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஆண்மைத்தனத்தை வெளிப்படுத்தும் ஆக்ஷன், கார் சேஸிங், ஹாலிவுட் பாணி சண்டைகள் ஆகியவை ஆண்களுக்கு 'வார்' படத்தை கவர காரணமாக இருக்கலாம்.
ஆனால் பெண்களுக்கு இரண்டே காரணம்தான். அவை ஹிர்திக் ரோஷன், டைகர் ஷெராஃப். மனதை மிகவும் ஈர்த்துள்ளனர்.
ஹர்திக் இதுபோன்று அதிகமாக படங்களில் நடிக்க வேண்டும். அத்துடன் அவர் தனது விந்தணுவை தானம் செய்ய வேண்டுகிறேன். 'வார்' படத்தை அனைவரும் பார்த்து ரசிங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹிர்திக் மீது தனக்குள்ள கிரேஸ்ஸை வெளிப்படுத்தியுள்ள பாவனாவின் இந்த ட்வீட் பதிவை பலரும் விமர்சித்துவருகின்றனர்.