மாடலிங், பாடகர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் கரண் ஓபராய். சின்னத்திரை இயக்குநர் மகேஷ் பட் இயக்கிய 'ஸ்வாமிமான்' என்ற தொடரின் மூலம் தனது கலைப்பயணத்தை தொடங்கிய கரண் ஓபராய் பல டிவி விளம்பரங்களிலும், நடித்து பிரபலமானார். இந்நிலையில், கரண் ஓபராய் இளம்பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்தப்பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து பணம் கொடுத்ததால் வீடியோவை தருகிறேன் எனக் கூறி மிரட்டி வந்துள்ளார்.
பாலியல் தொல்லை கொடுத்த சின்னத்திரை நடிகர் கைது..!
பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் விடுத்த சின்னத்திரை நடிகர் கரண் ஓபராய் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனால் மிகவும் மன வேதனை அடைந்த அப்பெண், மும்பை ஓஷிவாரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று நடிகர் கரண் ஓபராய் மீது பாலியல் புகார் அளித்தார். இதனையடுத்து, அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கரண் ஓபராயை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கரண் ஓபராய் மீது இந்திய குற்றவியல் பிரிவு 376 பலாத்காரம் மற்றும் 384 பணம் பறிப்பு ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வருகின்ற 9ஆம் தேதி வரை காவலில் வைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கரண் ஓபராய் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பாலிவுட் திரையுலகினரை கதிகலங்க வைத்துள்ளது.