லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் "பூமி". இந்த படம் ஹாஸ்டார் டிஸ்னி ப்ளஸ் ஓடிடி தளத்தில் நேற்று (ஜனவரி 14) வெளியானது.
'பூமி படத்தை திரையரங்குகளில் வெளியிட முயற்சி' - தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் - ஜெயம் ரவி நடிப்பில் பூமி திரைப்படம்
பூமி படத்தை திரையரங்குகளில் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் கூறினார்.
bhoomi movie
இது குறித்து பேசிய அப்படத்தின் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார், கரோனா பரவல் காரணமாக தங்களால் பூமி படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியவில்லை என்றும் விவசாயிகளின் பிரச்னையை அழுத்தமாக இந்த படம் பேசியிருப்பதாகவும் கூறினார்.
இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், இது பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றார்.