திருஞானம் இயக்கத்தில் நடிகை திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பரமபதம்'. திரிஷாவின் 60ஆவது படமான இப்படத்தை 24 ஹவர்ஸ் புரொடக்ஷன் தயாரித்துள்ளது.
ஓடிடி தளத்தில் வெளியாகும் த்ரிஷாவின் 'பரமபதம்'! - த்ரிஷாவின் பரமபதம்
சென்னை: நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'பரமபதம்' திரைப்படம் டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
paramapatham
இப்படத்தில் நந்தா, வேலராமமூர்த்தி, பேபி மானஸ்வி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அம்ரிஷ் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ரீலிஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டும் சில பல காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், 'பரமபதம்' திரைப்படம் தமிழ் புத்தாண்டு அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.