தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 152ஆவது படமான 'ஆச்சார்யா' படத்தை கொரட்லா சிவா இயக்குகிறார். இந்தப் படத்தையும் ராம்சரணின் கோணிடெலாவும், மேட்னி என்டர்டெயின்மென்டும் இணைந்து தயாரிக்கின்றன. திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.
'மீண்டும் உங்களை நல்ல படத்தில் சந்திப்பேன்' - 'ஆச்சார்யா' திரிஷா - திரிஷா தெலுங்கு படத்தில் இருந்து விலகல்
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் உருவாகி வரும் 'ஆச்சார்யா' படத்திலிருந்து தான் விலகியுள்ளதாக திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
!['மீண்டும் உங்களை நல்ல படத்தில் சந்திப்பேன்' - 'ஆச்சார்யா' திரிஷா trisha](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6405857-155-6405857-1584173294062.jpg)
முக்கியக் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவிருந்தார். இந்நிலையில் இப்படத்தில் இருந்து தான் விலகியுள்ளதாக திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், ”சில சமயங்களில் ஆரம்பத்தில் கலந்துரையாடிய விஷயங்கள், தற்போது நடக்கும்போது வேறு விதமாக மாறும். சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சிரஞ்சீவியின் திரைப்படத்திலிருந்து நான் விலகிவிட்டேன். படக்குழுவுக்கு என் வாழ்த்துகள். என் அன்பார்ந்த தெலுங்கு ரசிகர்களே... மீண்டும் உங்களை ஒரு நல்ல படத்தின் மூலம் சந்திப்பேன் என நம்புகிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.