சென்னை: சைக்கிள் ரைடிங் செல்வதற்காக த்ரிஷா ஒரு புதிய சைக்கிளை வாங்கியுள்ளார். இனி அவரை கிழக்கு கடற்கரை சாலையில் காணலாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் த்ரிஷா. 18 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் இயங்கிவருகிறார். அவர் நடிக்கும் படங்கள் சரியாக போவதில்லை என விமர்சனம் எழுந்தபோது ‘96’ படத்தில் ஜானுவாக வந்து மனதில் பதிந்தார். தற்போது சோலோ ஹீரோயினாக சில படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது த்ரிஷா சைக்கிள் ரைடிங் செல்வதற்காக புதிய சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திரைத்துறை கலைஞர்கள் தங்கள் உடல்நலன் மீது மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆர்யா, சந்தானம் போன்றவர்கள் சைக்கிள் ரைட் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில் த்ரிஷாவும் தற்போது இணைந்துள்ளார். இனி ஈசிஆர் பக்கம் சென்றால் நீங்கள் த்ரிஷாவை காணலாம்.
இதையும் படிங்க:9 years of Billa 2 - தன்னைத்தானே செதுக்கியவன் இவன்!