‘பேட்ட’ படத்திற்குப் பிறகு திரிஷா நடித்து எந்தப் படமும் வெளியாகவில்லை. ‘96’ படத்தின் வெற்றி திரிஷாவின் மார்க்கெட்டை உயர்த்தியது. ராங்கி, சுகர், பரமபதம் விளையாட்டு என பல படங்களில் புக் செய்யப்பட்டார்.
'பரமபதம் விளையாட்டு' படத்தை அறிமுக இயக்குநர் திருஞானம் இயக்கியுள்ளார். ரிச்சர்டு, நந்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை 24 Hrs புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. திரில்லர் ரகத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதில் திரிஷாவுக்கு மகளாக ‘இமைக்கா நொடிகள்’ புகழ் மானஸ்வி கொட்டாச்சி நடித்துள்ளார்.