கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் நடிகை திரிஷா. இவர் சமீபகாலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். திரிஷா நடிப்பில் ’கர்ஜனை’, ’சதுரங்கவேட்டை 2’ உள்ளிட்ட சில படங்கள் வெளியீடுக்கு தயாராக உள்ளது.
நடிகை திரிஷா நடிப்பில் உருவாகும் 'ராங்கி' - trisha new movie
‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய சரவணனின் இயக்கத்தில் நடிகை திரிஷா நடிக்கும் 'ராங்கி' என்ற புதிய படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.
![நடிகை திரிஷா நடிப்பில் உருவாகும் 'ராங்கி'](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-3055619-thumbnail-3x2-tri.jpg)
ராங்கி
இந்நிலையில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய சரவணன் இயக்கும் புதிய படத்தில் நடிகை திரிஷா நடிக்கிறார். இந்தப் படத்திற்கு 'ராங்கி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இப்படத்தின் தொடக்க விழா, பூஜையுடன் இன்று நடைபெற்றது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.