‘பேட்ட’ படத்துக்கு பிறகு திரிஷா நடித்து எந்த படமும் வெளியாகவில்லை. ‘96’ படத்தின் வெற்றி திரிஷாவின் மார்கெட்டை உயர்த்தியது. ராங்கி, சுகர், பரமபதம் விளையாட்டு என பல படங்களில் புக் செய்யப்பட்டார். இதில் ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரிஷாவின் அடுத்த பட வெளியீடு அறிவிப்பு - Paramapatham vilayattu movie download
திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் வெளியீடு பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
’சர்வம்’ படத்துக்கு பிறகு திரிஷா ‘பரமபதம் விளையாட்டு’ படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் திருஞானம் இயக்கியுள்ள இந்த படத்தை 24 Hrs புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. திரில்லர் ரகத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு சென்சாரில் U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. இதில் திரிஷாவுக்கு மகளாக ‘இமைக்கா நொடிகள்’ புகழ் மானஸ்வி கொட்டாச்சி நடித்துள்ளார்.
மேலும் நந்தா, ரிச்சர்ட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அரசியல் குற்றப் பின்னணியில் திரிஷா சிக்கிக் கொள்வது போல இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது என கோடம்பாக்க வட்டாரம் கிசுகிசுக்கிறது.