தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காணாமல் போன த்ரிஷாவின் ஸ்பெஷல் அப்டேட்! - trisha krishan

96 ஜானுமா 'ராங்கி'யாக மாறியிருக்கும் கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் குதூகலத்துடன், இது த்ரிஷாவின் ஸ்பெஷல் அப்டேட் என கூறிவருகின்றனர்.

thrisha

By

Published : Aug 15, 2019, 9:56 PM IST

தமிழ்த் திரையுலகில் 5 வருடங்களாக முன்னணி நடிகையாக நீடித்திருப்பதே கடினம். ஆனால், 16 வருடம் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. சமீப காலமாக கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் படத்தில் நடித்து வருகிறார். '96' படத்தில் ஜானுவாக வந்து தமிழ் ரசிகர்களை காதலில் திளைக்க வைத்தார். துவண்டு போயிருந்த த்ரிஷாவிற்கு 96, பேட்ட படத்தின் வெற்றி புது உற்சாகத்தை அளித்தது.

தற்போது 'எங்கேயும் எப்போதும்' இயக்குநர் சரவணன் இயக்கும் ’ராங்கி’ படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் மாலத்தீவில் ஹாலிடே என குதூகலத்துடன் இருந்து வந்த, த்ரிஷாவை உற்சாகமூட்டும் விதமாக, இப்படத்தின் படக்குழு செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. முன்னதாக த்ரிஷா கைதாவதுபோல் வெளியான, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், இப்போஸ்டரும் வைரலாகி வருகிறது.

ராங்கி செகண்ட் லுக் போஸ்டர்

கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் படம் என்பதால் பயங்கர எதிர்பார்ப்பை, இப்படம் ஏற்படுத்தியுள்ளது. கையில் துப்பாக்கியுடன் இருக்கும் த்ரிஷா எதிரிகளை வேட்டையாட காத்திருப்பது போல் இருக்கிறது. இந்த போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் '96' ஜானு திமிர் பிடித்த 'ராங்கி'யாக மாறிவிட்டார் என்றும் அரசல் புரசலாக கூறிவருகின்றனர். 73-ஆவது சுதந்திர தினத்திற்கு வெளிவந்துள்ள த்ரிஷாவின் இந்த ஸ்பெஷல் அப்டேட் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details