தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்த புகைப்படங்கள் எங்கே? குழப்பத்தில் ரசிகர்கள்! - Trisha latest news

த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த புகைப்படங்கள் ஏன் நீக்கப்பட்டது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Trisha
Trisha

By

Published : Aug 18, 2020, 3:40 PM IST

தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் இடைவிடாமல் நடித்து வருபவர் நடிகை த்ரிஷா. எப்போதும் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் த்ரிஷா, மற்ற நடிகர் - நடிகைகள் போல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொருள்களை விளம்பரம் செய்து சம்பாதித்தது இல்லை.

இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.4 மில்லியன் பேரும், ட்விட்டர் பக்கத்தில் 5.2 மில்லியன் பேரும் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்த பழைய புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார். வெறும் ஏழு புகைப்படம் மட்டுமே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது உள்ளது. திடீரென்று அவர் புகைப்படங்களை நீக்கியதற்கான காரணம் தெரியாமல் த்ரிஷா ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கடந்த சில வாரங்கள் முன்பு த்ரிஷா சமூக வலைதள பக்கங்களிலிருந்து விலகி இருக்கப்போவதாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details