தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் 10 வருடத்திற்கு மேல் நாயகியாக சினிமா உலகைக் கலக்கிக்கொண்டிருப்பவர் திரிஷா. தமிழ் பெண்ணாக இந்த வளர்ச்சியை பெற்றிருப்பது சக நடிகைகளையும் வியக்க வைத்துள்ளது. வெற்றிகளை விட தோல்விகளை சந்தித்து வந்த திரிஷாவிற்கு 96 திரைப்படம் அவரது சினிமா கெரியரில் பெரிய திருப்புமுனையை தந்துள்ளது.
மாலத்தீவில் தனிமையை ரசிக்கும் திரிஷா! - ட்விட்டர்
மாலத்தீவில் கடற்கரையோரம் தனிமையை ரசிக்கும் நடிகை திரிஷாவின் புகைப்படம் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மீண்டும் நாயகியாக தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள திரிஷா தற்போது எங்கேயும் எப்போதும் பட இயக்குநர் சரவணன் இயக்கும் 'ராங்கி' படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள 'பரமபத விளையாட்டு' படத்தின் டீசர் இரு மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இவர் நடித்துள்ள சதுரங்க வேட்டை-2, கர்ஜணை ஆகிய படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் படத்தின் வெளியீடு தாமதமாகி வருகிறது.
இந்நிலையில், அதிகம் ஊர் சுத்தும் பழக்கம் கொண்ட திரிஷா தற்போது மாலத்தீவில் தனியாக கடற்கரையில் குளித்து விட்டு ஹாயாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நான் கவனிக்க தயாராக இருக்கும்போது என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். திரிஷாவின் இந்த புகைப்படம் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.