தமிழ்நாடு

tamil nadu

தமன்னா...சமந்தா...வழியை பின் தொடர்ந்த த்ரிஷா!

By

Published : Oct 18, 2021, 3:09 PM IST

தெலுங்கில் உருவாகும் இணையத்தொடர் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Trisha
Trisha

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்டார். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு வெளியாகிறது.

இதனையடுத்து டிஜிட்டல் தளமான ஓடிடியில், தெலுங்கில் உருவாகும் இணையத்தொடரில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சூர்யா வங்கலா இயக்கும் பிருந்தா இணையத்தொடரில் த்ரிஷா நடிக்கிறார். இந்த தொடர் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

ஏற்கனவே இணையத்தொடரில் தமன்னா, சமந்தா உள்ளிட்டோர் கால்பதித்துள்ள நிலையில், தற்போது த்ரிஷாவும் குதித்துள்ளார்.

இதையும் படிங்க: 'பொன்னியின் செல்வன்' குந்தவை கொடுத்த மாஸ் அப்டேட்!

ABOUT THE AUTHOR

...view details