தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

முத்துப்பாண்டியின் சவாலை ஏற்ற தனலெட்சுமி! - மரக்கன்றுகளை நட்ட விஜய்

சென்னை: பிரகாஷ் ராஜின் பசுமை இந்தியா சவாலை ஏற்று திரிஷா மரக்கன்றுகள் நட்டார்.

திரிஷா
திரிஷா

By

Published : Oct 3, 2020, 9:36 PM IST

தெலுங்கு திரை நட்சத்திரம் மகேஷ் பாபு, தனது பிறந்த நாளில் சமூக வலைத்தளத்தில், #GreenIndiaChallengeஐ ட்ரெண்ட் ஆக்கினார்.
இந்தச் சேலஞ்சில் மரக்கன்று ஒன்றை நட்டு அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, அது குறித்து எடுத்துச் சொல்லி, பிற பிரபலங்களையும் மரக்கன்றுகள் நட தூண்ட வேண்டும்.
அதன்படி தனது பிறந்தநாளில், மகேஷ் பாபு மரக்கன்றுகளை நட்டு விஜய், ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு சவால் விடுத்திருந்தார்.
இந்தச் சேலஞ்சை ஏற்ற விஜய் மரக்கன்றுகளை நட்டு புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இதனைத் தொடர்ந்து விஜய்யின் ரசிகர்கள் இந்தச் சேலஞ்சை ஏற்று மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். சமீபத்தில் இந்தச் சேலஞ்சை ஏற்ற பிரகாஷ்ராஜ் தனது மகனுடன் மரக்கன்றுகள் நடும் பதிவுகளை சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாது, மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், திரிஷா உள்ளிட்ட ஐந்து பேருக்கு சவால் விடுத்திருந்தார்.

தற்போது திரிஷா இந்தச் சேலஞ்சை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். அதன்படி தனது வீட்டின் தோட்டத்தில், மரக்கன்றுகளை நடும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அதில், “நாம் அனைவரும் இயற்கையை மீண்டும் பசுமை ஆக்குவதற்கு நம்மால் முடிந்த சிறிய உதவியை செய்வோம்” என்று கூறியுள்ளார்.

திரிஷாவின் செயலுக்கு பிரகாஷ் ராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆக, கில்லி முத்துப்பாண்டியின் (பிரகாஷ்ராஜ்) வேண்டுகோளை தனலெட்சுமி (திரிஷா) ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details