தமிழில் வெளியான 'தரமணி' படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் வசந்த் ரவி. இவர் தற்போது அறிமுக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'ராக்கி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருடன் பாரதி ராஜா, சரண்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
'காலம் ஒரு துரோகி...நேரம் ஒரு நோய்' - கொல மாஸில் வெளியான 'ராக்கி' ட்ரெய்லர்! - வசந்த் ரவி
நடிகர் வசந்த் ரவி நடிப்பில் உருவாகி வரும் 'ராக்கி' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
rocky
இப்படத்திற்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ’காலம் ஒரு துரோகி’ என கவிதை போன்று தொடங்கும் வாய்ஸ் ஓவரில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் பல ஆக்ஷன் சீசன்களும் பல கொலைவெறித் தாக்குதல் சீன்களும் இடம் பெற்று காண்போரை மிரளவைக்கிறது. இப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:காய்த்த மரமே கல்லடி படும் - இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்