மலையாளத்தில் வித்தியாசமான கதைகளைத் தேர்வுசெய்து நடித்து, அதன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் டொவினோ தாமஸ். இவர் தமிழில் தனுஷுடன் இணைந்து 'மாரி 2' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
அறிகுறி இல்லாமலேயே கரோனா தொற்று உறுதி - டொவினோ தாமஸ் - டொவினோ தாமஸுக்கு கரோனா
மலையாள நடிகர் டொவினோ தாமஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tovino
இந்நிலையில், டொவினோ தாமஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், "எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உடனே என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். ஆனால் எனக்கு கரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே தொற்று உறுதியாகியுள்ளது. எனவே ஒரு சில நாட்கள் நான் தனிமையிலிருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவுள்ளேன். விரைவில் கரோனாவிலிருந்து மீண்டு வருவேன்" என்று தெரிவித்துள்ளார்.