இயக்குனர் அமுதவாணனின் இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் வெளியான கோட்டா திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்தது.
டொரன்டோ திரைப்பட விழா - சிறந்த படம் கோட்டா
சென்னை: இயக்குநர் அமுதவாணனின் கோட்டா திரைப்படம் டொரன்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்வாகியுள்ளது.
கோட்டா
அப்படம் வெளியானபோது திரையரங்குகளில் மிகுந்த வரவேற்பையும் ரசிகர்களையும் பெற்றது. சிறந்த விமர்சனங்களையும் பெற்றிருக்கும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் ட்ரெய்லரை சினிமா மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள பல பிரபலங்கள் வெளியிட்டிருந்தார்கள்.
அதுமட்டுமின்றி இதுவரை அப்படம் 64 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இந்நிலையில் டொரன்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது.