தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

யுவன் சங்கர் ராஜாவின் 'டாப் டக்கர்' பாடல் புதிய சாதனை!

ராஷ்மிகா மந்தனாவுடன் யுவன் சங்கர் ராஜா இணைந்து பணியாற்றிய 'டாப் டக்கர்' பாடல் சமூக வலைதளத்தில் புதிய சாதனையை படைத்து வருகிறது.

yuvan
yuvan

By

Published : Feb 16, 2021, 6:31 PM IST

யுவன் சங்கர் ராஜாவுக்கு தமிழ்நாட்டில் வெறித்தனமான பெரும் ரசிகர் கூட்டம் இருப்பது போல் தென்னிந்தியாவிலும் உள்ளது. யுவன் இசையில் உலகளவில் சாதனை படைத்த “ரவுடி பேபி” பாடலுக்கு முன்னதாகவே, உலகமெங்கும் மொழியை கடந்து, அவரை பின்பற்றும் ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா, இந்திய இசை பிரபலங்களான பாதுஷா, உஜானா அமித் ஆகியோருடன் 'டாப் டக்கர்' எனும் ஒரு சுயாதீன இசை பாடலில் இணைந்துள்ளார்.

பாதுஷாவுடன் யுவன் சங்கர் ராஜா

இப்படாலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பாதுஷா, உஜானா அமித் பாடலை பாடியுள்ளனர். மூவரும் இணைந்து திரையில் தோன்றி கலக்கியிருக்கும் இப்பாடலில், இவர்களுடன் ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளார். இப்பாடலின் ஒரு சிறு பகுதியில் தமிழில் வரும் வரிகளை யுவன் சங்கர் ராஜா தானே பாடியுள்ளார். மேலும் ஜொனிடா காந்தி அவர்களும் ஒரு சிறு பகுதிக்கு குரல் தந்துள்ளார்.

ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள இப்பாடல் யூடியூப் தளத்தில் வெளியான மிகக்குறுகிய நேரத்தில் 25 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு நொடியும் ரசிகர்களின் பார்வை எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. மொழி எல்லைகளை கடந்து, தற்போது அனைத்து இசை ரசிகர்களையும் கவர்ந்து, சாதனை படைத்து வருகிறது.

டாப் டக்கர் ஆல்பம்

யுவன் சங்கர் ராஜாவின் திரை இசையல்லாத சுயாதீன இசை பயணம் ஜூலை 1999ல் “The Blast” ஆல்பத்தில் தொடங்கியது. இந்த ஆல்பம் தமிழின் முன்னணி பிரபலங்கள் உன்னிகிருஷ்ணன், கமலஹாசன் உட்பட பலர் பாடியுள்ள 12 பாடல்கள் தொகுப்பினை கொண்டது. தனது U1 Records இணையதளம் மூலம் பல சுயாதீன இசை முன்னெடுப்புகளையும், பல இசைத்திறமைகளையும் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா அறிமுகம் செய்து வருகிறார்.

தொடர்ந்து திரை இசை தவிர்த்த சுயாதீன இசை ஆல்பங்களை வளரும் கலைஞர்களுடன் இணைந்து உருவாக்குவதில் வெகு ஆர்வமுடன் யுவன் சங்கர் ராஜா இயங்கி வருகிறார்.

இதையும் படிங்க: ‘I am a தமிழ் பேசும் இந்தியன்’ - சமூக வலைதளத்தில் பட்டைய கிளப்பும் யுவனின் புதிய அவதாரம்...!

ABOUT THE AUTHOR

...view details