தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'அன்சார்டட்' திரைப்படத்துக்காக 17 முறை காரில் அடிபட்டேன் - டாம் ஹாலந்த் - 17 முறை காரில் அடிபட்ட டாம் ஹாலந்த்

அன்சார்டட் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆக்சன் காட்சிக்காக ஒரே நாளில் 17 முறை காரில் அடிபட்டேன் என ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலந்த் தெரிவித்துள்ளார்.

டாம் ஹாலந்த்
டாம் ஹாலந்த்

By

Published : Feb 17, 2022, 4:23 PM IST

‘ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’ படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பிரபல நட்சத்திரமாக மாறியிருப்பவர் டாம் ஹாலந்த். இவர் அடுத்ததாக சோனி பிக்சர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் வெளியிடும் ‘அன்சார்டட்’ ஆக்சன் அட்வென்சர் படத்தின் மூலமாக ரசிகர்களை அசத்தவருகிறார்.

ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு என நான்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு நாளை (பிப்ரவரி 18) இப்படம் வெளியாகிறது. சாதாரண வாழ்க்கை வாழும் நாதன் டிரேக் (டாம் ஹால்ந்த்) 500 ஆண்டுகளுக்கு முன்பான மான்காடா மாளிகையின் செல்வத்தை கண்டுபிடிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

5 பில்லியன் புதையல் வேட்டை

ஒரு சாதாரண திருட்டு வேலையாகத் தொடங்கும் இந்தப் பயணம் மிகப்பெரும் அட்வென்சராக மாறுகிறது. சாண்டியாகோ மான்காடா (அன்டோனியோ பண்டேராஸ்) என்னும் நபருக்கு முன்னதாக அந்தப் புதையலை அடைய வேண்டிய சவால் டான் ஹாலந்த் முன் நிற்கிறது.

உலகின் மிகப் பழமையான மர்மங்களில் ஒன்றான இந்தப் புதையலைக் கண்டுபிடிக்க முடிந்தால், 5 பில்லியன் மதிப்புள்ள புதையல் கிடைக்கும். நீண்ட நாள்களாகக் காணாமல்போன 'நேட்'டின் சகோதரனைக்கூட கண்டுபிடிக்கக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன என்பதே படத்தின் மையக்கரு.

இத்திரைப்படம் குறித்து பல்வேறு சுவாரஷ்ய தகவல்களை டாம் ஹாலந்த் பகிர்ந்துகொண்டுள்ளார்.

17 முறை காயம்

அதில், "இப்படத்தின் விமான ஸ்டண்ட்தான் மிகவும் பெருமைப்படக்கூடிய தருணம். படப்பிடிப்பில் என்னை ஒரு கார் மோதிய நாள் மிகவும் சுவாரசியமான அனுபவமாக இருந்தது. அது இந்தத் திரைப்படத்தின் சிறந்த சண்டைக் காட்சிகளில் ஒன்று. அன்றைய நாளில் மட்டும் நான் 17 முறை காரில் அடிபட்டேன்.

அன்சார்டட் 4 கேம் 2016ஆம் ஆண்டு வெளியான நாள்முதல் அதன் தீவிர ரசிகனாக இருந்துவருகிறேன். இப்போது நானே அதன் திரைவடிவத்தில் நாயகனாக நடித்திருக்கிறேன். மிகப்பெரும் ஆக்சன் காட்சிகளில் நடித்தாலும், அவை ப்ளூ ஸ்கிரீனில் எடுக்கப்பட்டு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸால் மாற்றப்படுபவை. ஆனால் இந்தப்படம் அப்படியானதில்லை.

இப்படம் நிஜ லொகேஷன்களில், நிஜமான ஆக்சனாக வடிவமைக்கப்பட்டது. இந்தப்படம் எடுக்க ஆரம்பித்தபோதே நிஜமான லொகேஷன்களில்தான் படம் எடுக்க வேண்டும் என்று ரூபன் பிடிவாதமாக இருந்தார்.

நிஜம் போலவே கிரிப்ட், தேவாலயம் இரண்டும் கட்டப்பட்டன. இதில் வரும் படகுகள் உண்மையானவை. படகுகள் பறக்கின்றன என்பதைக் காட்ட, கிம்பலின் இருபுறங்களிலும் கேமரா நகரும்படி செய்து பறக்கும் உணர்வைக் கொண்டுவந்தோம்.

இந்தப் படத்திற்காக நாங்கள் என்ன செய்ய முடியுமோ, அதையும் தாண்டி பலமடங்கு உழைத்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சர்வதேச பெருமையைப் பெற்ற 'ஒத்த செருப்பு சைஸ் 7'!

ABOUT THE AUTHOR

...view details