டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'மிஷன் இம்பாசிபிள்'. இந்தப் படத்தின் வரிசையிஸ் இதுவரை ஆறு பாகங்கள் வெளியாகியுள்ளன. இதில் 'ஈடன் ஹன்ட்' என்னும் கதாபாத்திரத்தில் டாம் க்ரூஸ் நடித்திருப்பார்.
கடைசியாக 2018ஆம் ஆண்டு ’மிஷன் இம்பாசிபிள்: ஃபால் அவுட்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்குயரி, டாம் க்ரூஸை வைத்து 'மிஷன்: இம்பாசிபிள் 7' படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தை பாரமவுண்ட் தயாரித்துவருகிறது.
ஐரோப்பாவில் நடைபெற்றுவந்த 'மிஷன்: இம்பாசிபிள் 7' படப்பிடிப்பு, கரோனா அச்சுறுத்தல் காரணமாகஇங்கிலாந்திற்கு மாற்றப்பட்டு அங்கு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதற்காக டாம் க்ரூஸ் கடந்த சில மாதங்களாக இங்கிலாந்தில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், அவரது பி.எம்.டபியூ. எக்ஸ் 7 கார் பர்மிங்காமினில் உள்ள கிராண்ட் ஹோட்டலுக்கு வெளியே திருடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் காரினுள் டாம் க்ரூஸின் உடமைகளும் இருந்துள்ளன.