வாஷிங்டன்: புவி ஈர்ப்பு சக்திக்கு எதிராக ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் சாகசம் செய்யும் விடியோவை 'டாப் கன்: மாவெரிக்' படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர்.
1986இல் டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 'டாப் கன்'. 34 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 'டாப் கன்: மாவெரிக்' என்ற பெயரில் தயாராகிவருகிறது. படத்தில் மாவெரிக் மிட்செல் என்ற கேரக்டரில் ஃபைட்டர் பைலட்டாக தோன்றும் டாம் க்ரூஸ், அமெரிக்க விமானப்படை மாணவர்களுக்கு போர்களின்போது அபாயகரமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் பயிற்சி அளிக்கிறார்.
அதிரடி ஆக்ஷன், சாகச காட்சிகளில் புகுந்து விளையாடும் இவர், இந்தப் படத்தில் கம்யூட்டர் கிராபிக்ஸ் (சிஜி), டூப் ஏதும் இல்லாமல் ஆபத்தான காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். ஃபைட்டர் ஜெட்டை அவர் இயக்குவது, அதைப் பயன்படுத்தி புவி ஈர்ப்பு சக்திக்கு எதிராக சாகசம் செய்யும் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.