தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அனைவரின் கவனத்தை ஈர்த்த 'ஜோக்கர்' மீண்டும் திரையில் - ஜோக்கர் பாக்ஸ் ஆபீஸ் வசூல்

கோத்தமின் மற்றவர்கள் கவனத்தைப் பெற ஜோக்கர் வேஷம் போட்டு அலைகிறார். ஆனால் பிறரால் அவமானப்படுத்தப்படுகிறார். உணர்ச்சியற்ற மனநிலைக்கும், கொடூர மனநிலைக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார்.

Joker
Joker

By

Published : Jan 28, 2020, 5:43 PM IST

ஆஸ்கார் விருதில் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ஜோக்கர் திரைப்படம் பிப்ரவரி 14 ஆம் தேதி மீண்டும் திரைக்கு வர உள்ளது.

டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரம் ஜோக்கர். இந்த கதாபாத்திரத்தை பல படங்களில் வில்லனாக காட்டியிருக்கிறார்கள். ஆனால் ஜோக்கரின் முன்கதையை யாரும் படமாக்கியதில்லை. இப்போது முதன்முறையாக ஜோக்கர் உருவான கதையை படமாக்கியிருக்கிறார் இயக்குநர் டோட் பிலிப்ஸ். ”ஆர்தர் ஃப்ளெக் என்பவர், எப்படி ஜோக்கராக மாறுகிறார்” என்பதை மையமாக வைத்து ‘ஜோக்கர்’ திரைப்படம் எடுக்கப்பட்டது.

அதில், ஜோக்கரின் கதாபாத்திரமான கோத்தமின் நொறுங்கிய சமூகத்தில் வாழும் ஆர்தர், தன்னைப் பற்றி அனைவரும் பேச வேண்டும் என விரும்புகிறார். மற்றவர்கள் கவனத்தைப் பெற ஜோக்கர் வேஷம் போட்டு அலைகிறார். ஆனால் பிறரால் அவமானப்படுத்தப்படுகிறார். உணர்ச்சியற்ற மனநிலைக்கும், கொடூர மனநிலைக்குமிடையில் சிக்கித் தவிக்கிறார். பின்னர் தொடர்ந்து தவறான முடிவுகளை எடுப்பதாக கதை நகரும். இந்த படம் வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதுமட்டுமல்லாது ஜோக்கர் கடந்தாண்டு பாக்ஸ் ஆபிஸிலும் பல்வேறு சாதனைகள் படைத்திருந்தது. மேலும், பல்வேறு கோல்டன் குளோப், கோல்டன் லயன், உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விருதுகளையும் வாங்கி குவித்தது. இந்நிலையில் பிப்ரவரி 9ஆம் தேதி வழங்க இருக்கின்ற ஆஸ்கார் விருதில் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட 11 பிரிவுகளுக்கு ஜோக்கர் படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியான இப்படம் மறுபடியும் பிப்ரவரி 14ஆம் தேதி திரைக்குவருகிறது. அதே தேதியில் ஆஸ்கார் ரேஸில் ஜோக்கர் படத்துக்கு போட்டியாக உள்ள ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் திரைப்படமும் வெளியாகிறது.

பாக்ஸ் ஆபிஸில் டிசி காமிக்ஸிலிருந்து வெளியான படங்களில் 1 பில்லியன் அமெரிக்க டலர்கள் வசூல் செய்து நான்கவது இடத்தை ஜோக்கர் பிடித்துள்ளது. இந்தியாவில் வெளியான இப்படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.

இதையும் வாசிங்க: ஆஸ்கர் விருதை எட்டிப்பிடிக்கும் ரேஸில் 344 படங்கள் போட்டி

ABOUT THE AUTHOR

...view details