தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'வாழ்நாள் முழுவதும் காதலிப்பேன்'- சுஷாந்த் சிங் காதலி உருக்கம்! - சுஷாந்த் காதலி

சுஷாந்த் சிங் மறைவு குறித்து அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுஷாந்த் காதலி
சுஷாந்த் காதலி

By

Published : Jul 14, 2020, 6:36 PM IST

'தோனி' பட நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மும்பை காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுஷாந்த் மறைந்து ஒரு மாதத்திற்கு மேலான நிலையில், அவரின் காதலி ரியா சக்ரபோர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, "இன்னும் உங்களின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் என் மனது தவித்து வருகிறது.

காதலின் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட நீங்கள் மட்டுமே காரணம். நீங்கள் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் இல்லை என்பதை என்னால் இன்னும் ஏற்கமுடியவில்லை. நிலா, நட்சத்திரங்களுடன் நீங்கள் தற்போது அமைதியான இடத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நம் காதல் குறித்து சொல்ல வார்த்தையே இல்லை. உங்களை இழந்து 30 நாள்கள் ஆகிவிட்டது. ஆனால், வாழ்நாள் முழுவதும் உங்களை நான் காதலித்துக் கொண்டே இருப்பேன். இந்த உலகம் கண்ட அதிசயம் நீங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details