தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வெனம் 2 வெளியீட்டு தேதி அறிவிப்பு! - latest cinema news

இந்தியாவில் வெனம் 2 படத்தின் வெளியிட்டு தேதி குறித்த அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

வெனம்
வெனம்

By

Published : Oct 4, 2021, 11:34 PM IST

மார்வெல் காமிக்ஸின் புகழ்பெற்ற வில்லன் கதாபாத்திரத்தை சூப்பர் ஹீரோவாக வைத்து வெளியான படம் 'வெனம்'. 2007ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர் மேன்' திரைப்படத்தில் 'வெனம்' கதாபாத்திரம் அறிமுகமானது.

அதன் பின் ஸ்பைடர் மேனின் பிரதான எதிரிகளில் 'வெனம்' கதாபாத்திரமும் ஒன்றானது. இதனையடுத்து 2018ஆம் ஆண்டு ரூபென் ஃப்ளெஸ்ஷர் இயக்கத்தில் 'வெனம்' திரைப்படம் வெளியானது. இதில் டாம் ஹார்டி, மிச்செல் வில்லியம்ஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து படத்தின் இரண்டாம் பாகத்தை ரூபன் ஃப்ளெஸ்ஷருக்கு பதிலாக ஆன்டி செர்கிஸ் இயக்கியுள்ளார். டாம் ஹார்டியே வெனம் 2 படத்திலும் நடித்துள்ளார்.

இந்தப் படம் அமெரிக்காவில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இது தற்போது இந்தியாவில் அக்டோபர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்திய பாக்ஸ் ஆபிஸை உலுக்கும் வகையில் 3D, IMAX, 4DX வடிவங்களில், இந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியாவிலும் இந்தப் படம் இந்தியாவிலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details