தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாடகர் மாணிக்க விநாயகம் மறைவு: ஸ்டாலின் நேரில் அஞ்சலி - மாணிக்க விநாயகம் மறைவு

மறைந்த பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

முதலமைச்சர் அஞ்சலி
முதலமைச்சர் அஞ்சலி

By

Published : Dec 27, 2021, 1:29 PM IST

'தில்' திரைப்படத்தில் 'கண்ணுக்குள்ள ஒருத்தி' பாடல் பாடி அறிமுகமானவர் மாணிக்க விநாயகம். சுமார் 15 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் இவர் இதுவரை பாடியுள்ளார். பாடல் பாடுவது மட்டுமின்றி இவர் திருடா திருடி, வேட்டைக்காரன், திமிரு, கிரி, பேரழகன், கம்பீரம் உள்ளிட்ட படங்களில் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

மாணிக்க விநாயகம் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (டிசம்பர் 26) சென்னையில் உயிரிழந்தார். அவரது உடல் திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பாடகர் மாணிக்க விநாயகம் மறைவு - ஸ்டாலின் நேரில் அஞ்சலி

அவரது உடலுக்கு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணிக்க விநாயகம் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக அவர் மறைவு குறித்து ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் பதிவில், "கருணாநிதி மீதும், என் மீதும் அளவற்ற அன்பைப் பொழிந்து, பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: Manikka Vinayagam: காற்றில் கரைந்த கம்பீரக் குரலோன் மாணிக்க விநாயகம்!

ABOUT THE AUTHOR

...view details