சென்னை: இயக்குநரும், நடிகருமான தங்கர்பச்சான் மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " அரசு ஊழியர்கள் மாதாந்திர அடிப்படையில்தான் ஊதியத்தை பெறுகின்றனர். அதுவும் ஒரே ஒரு நாள் கூட தாமதமாகாமல்!
ஆனால் மின்சாரக்கட்டண கணக்கெடுப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிக்கப்படுகின்றன. மாதம் மாதம் கணக்கெடுத்திருந்தால் என் வீட்டிற்கு மின்சாரக் கட்டணமாக 16 ஆயிரம் மட்டுமே வந்திருக்கும். ஆனால், கடந்த மாதத்தில் 36 ஆயிரம் ரூபாய் மின்சார கட்டணமாக செலுத்தியுள்ளேன்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கெடுக்கப்படுவதால் இரண்டேகால் மடங்கு அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் மின்சாரக் கட்டணக்கொள்ளையை தடுக்கும் விதமாக மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வருவோம் என முதலமைச்சர் கூறியிருந்தார்.