ராஜரிஷி இயக்கத்தில் காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் காளையப்பன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், ‘மதுரை மணிக்குறவன்'. மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இதில் ஹரிக்குமார் கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
மாதவிலதா கதாநாயகியாக நடிக்க அவருடன் இணைந்து காளையப்பன், சுமன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், கௌசல்யா, பருத்தி வீரன் சுஜாதா, கஞ்சா கருப்பு, அஸ்மிதா, ராஜ்கபூர், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.