செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து 2 திரைப்படங்கள் உருவாகவுள்ளதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'S12' படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.
செல்வராகவன்- தனுஷ் காம்போவில் ‘நானே வருவேன்’ - நானே வருவன் பட அப்டேட்
சென்னை: செல்வராகவன்- தனுஷ் இணையும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் அறிவித்தபடி, 'S12' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. ‘நானே வருவேன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டு, அப்போஸ்டரில் தனுஷ் மிகவும் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பது போலவும், பின்புறத்தில் பிரமாண்டமாக உள்ள அரண்மனை தீ பற்றி எரிவதும் போல் உள்ளது.
முன்னதாக செல்வராகவன், ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ திரைப்படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவித்தார். ஆனால் அதுகுறித்த அடுத்தக்கட்ட அறிவிப்பு எதையும் வெளியிடாமல் ரகசியம் காத்துவந்தார். இச்சூழலில், ஒருவேளை, ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படமாகத்தான், ‘நானே வருவேன்’ படம் இருக்குமோ என்று செல்வராகவனின் ரசிகர்களும், தனுஷ் ரசிகர்களும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.