பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் கரோனா காரணமாகத் திரையரங்குகளில் 50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் சென்னையில் பெரும்பாலான திரையரங்குகளில் அரசின் உத்தரவு துளியும் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.