தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அரசுப்பள்ளிகளின் தரம் உயா்த்த வருகிறாள் "ராட்சசி" - Director Gautham Raj

இயக்குநர் கௌதம் ராஜ் "ராட்சசி" படத்தை பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிா்ந்துள்ளாா்.

தரம் உயா்த்த வருகிறாள் "ராட்சசி"

By

Published : Jun 15, 2019, 9:45 AM IST

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் கௌதம்ராஜ் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்துள்ள படம் “ராட்சசி”. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது .

அரசுப்பள்ளியின் தரம் உயா்த்த வருகிறாள் "ராட்சசி

இத்திரைப்படம் குறித்து இயக்குநர் கௌதம்ராஜ், “ஒவ்வொரு பையனோட முதல் ஹீரோயினும் ஒரு டீச்சரா தான் இருப்பாங்க. எனக்கு என்னோட நாலாங்கிளாஸ் “நிர்மலா டீச்சர்”, ஒவ்வொருத்தருக்கும் இப்படி ஒரு டீச்சர் பேர் கட்டாயம் மனசில இருக்கும். அவங்கதான் இந்த டீச்சர் “ராட்சசி” கீதாராணி.

காலேஜ்கூட எத்தனை வயசானாலும் ஏதாவது ஒரு வகையில படிக்க முடியும் ஆனா, ஸ்கூல் லைப் ஒருதடவைதான். தியேட்டரை விட்டு வெளிய வரும் போது அந்த நினைவுகளை தரும். அரசுப் பள்ளியில் மாற்றம் உருவாக்கப்படணும்ங்கிறது மாற்றுக் கருத்தே இல்ல தமிழ்நாட்டுல உள்ள ஒவ்வொருத்தரோட எண்ணமும் அதேதான். அதைதான் திரை வடிவமா மாத்தியிருக்கேன்.

ராட்சசியா ஜோதிகா மேடம் தவிர வேற யாரும் இவ்வளவு கச்சிதமா பண்ணிரமுடியாது, அது படம் பாக்கும் போது உங்களுக்கும் தெரியும். ராட்சசி கதைய கேட்டதுல இருந்து நிறைய ஹோம் ஒர்க் பண்ணாங்க, நிறைய டீச்சர்ஸ்கிட்ட பேசுனாங்க. அவங்க டிரஸ்ஸிங், மேக்கப் சேஞ்ச், பாடிலாங்குவேஜ்னு அவ்வளவு டெடிகேசன், “ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி.

”வியாபார நோக்கத்துல கல்விய விக்க ஆரம்பிச்சவங்க, அரசுப் பள்ளிய மக்களோட பொதுப் புத்தியில வேற மாதிரியா உருவாக்கிட்டாங்க. தனியார் பள்ளி – அரசுப்பள்ளிங்கிற ஏற்றத்தாழ்வு உருவாகியிருக்கவே கூடாது, அந்த எண்ணத்தை மாத்தணும்னு போராடுறவங்கதான் இந்த "ராட்சசி" கீதாராணி.

இந்த நோக்கத்தோட எத்தனையோ ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுக்க தனி ஆட்களா, அரசு பள்ளிய உயர்த்த போராடிகிட்டு இருக்காங்க, அவங்களுக்கு சல்யூட். இந்த படத்தோட ஹீரோ அவங்கதான். அரசுப்பள்ளிகளோட தரம் உயரணுங்கிறது அரசுப்பள்ளியில படிக்கிற பசங்களோட தரம் உயரணுங்கிறதுக்காகத்தான், அதை வலிமையாக பேச இந்த மாதிரி ராட்சசிங்க வந்தே ஆகணும் என்று கூறியுள்ளாா்.

இயக்குநர் கௌதம்ராஜ் மற்றும் நடிகை ஜோதிகா

இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர தயாராக உள்ளது எனவும் தொிகிறது.

ABOUT THE AUTHOR

...view details