நடிகர் விஜய் சேதுபதி-பார்த்திபன் இணைந்து நடித்துவரும் திரைப்படம், ’துக்ளக் தர்பார்’. இப்படத்தின் டீஸ்ர் நேற்று(ஜன.11) வெளியாகியது. இதில் பார்த்திபன் அரசியல்வாதியாக நடித்துள்ளார்.
சீமானை சீண்டும் விஜய் சேதுபதி? - விஜய் சேதுபதி படங்கள்
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று (ஜன.11) வெளியான 'துக்ளக் தர்பார்' படத்தின் டீஸர் சீமானை சீண்டுவது போல் இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் படத்தில், பார்த்திபன் கேரக்டர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போலவே சித்தரிக்கப்பட்டிருப்பதாக, நாம் தமிழர் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதேபோல் படத்தில் பார்த்திபன் பெயர் மற்றும் கட்சியின் பெயர் போன்றவை சீமானை சீண்டும் விதமாக இருக்கிறதெனவும் அக்கட்சியினர் கூறியுள்ளனர்.
முன்னதாக முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனால் சீமானுக்கு, விஜய் சேதுபதி சவால் விடுவது போன்ற வசனங்கள் டீஸரில் வைக்கப்பட்டிருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் நினைத்திருக்கலாம் என்று விஜய் சேதுபதி ரசிகர்கள் கூறுகின்றனர்.