நடிகர் விஜய் ஆண்டனி தற்போது ’தமிழரசன்’, ’அக்னிச் சிறகுகள்’, ’காக்கி’, ’கோடியில் ஒருவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இதனையடுத்து தற்போது ’விடியும்முன்’ பட இயக்குநர் பாலாஜி குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இன்பினிட்டி பிலிம் வெண்டர்ஸ் தயாரிக்கும் இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார்.
பூஜையுடன் தொடங்கிய விஜய் ஆண்டனி பட படப்பிடிப்பு - vijay antony latest movies
நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 16) பூஜையுடன் தொடங்கியது.
![பூஜையுடன் தொடங்கிய விஜய் ஆண்டனி பட படப்பிடிப்பு விஜய் ஆண்டனி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11029696-457-11029696-1615894183701.jpg)
விஜய் ஆண்டனி
இந்நிலையில் பாலாஜி குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 16) பூஜையுடன் தொடங்கியது. முதல்முறையாக விஜய் ஆண்டனி-ரித்திகா சிங் கூட்டணியில் உருவாகும் இப்படம் காதலை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. விரைவில் படத்தின் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:'தி பிக் புல்' பட அப்டேட் வெளியீடு