தமிழ் சினிமாவில் "என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி" பாடலின் மூலம் புகழ் பெற்றவர் டிகேஎஸ் நடராஜன். இவர் பாடகராக மட்டுமல்லாது 'இரத்த பாசம்', 'கவலை இல்லாத மனிதன்', 'தேன்கிண்ணம்', 'நேற்று இன்று நாளை', 'நான் ஏன் பிறந்தேன்', 'குரு', 'தீ', 'வருஷம்16', 'வாத்தியார்' உள்பட்ட சுமார் 500 படங்களுக்கு மேல் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.
டி.கே.எஸ். நடராஜன் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்! - டிகேஎஸ் நடராஜன் மறைவு
சென்னை: பழம்பெரும் நாட்டுப்புற பாடகர் - நடிகர் டிகேஎஸ் நடராஜன் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

TKS Natarajan
நாட்டுப்புறப்பாடலுடன் சினிமாவில் நடிகராக அறிமுகமான டிகேஎஸ் நடராஜன் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 87. இவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. அதில் அண்ணாது மறைவுக்கு அனைத்து நடிகர், நடிகைகள் சமூகம் சார்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலையும் அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்துக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.