பாலிவுட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் அந்தாதூன். இந்த படம் ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரேனா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதையும் பெற்றது.
புத்தாண்டை முன்னிட்டு பிரசாந்தின் புதிய படத்தின் தலைப்பு வெளியீடு! - தயாரிப்பாளர் தியாகராஜன்
பிரசாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு "அந்தகன்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
prasanth_film_title
இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் பெற்று தனது மகன் பிரசாந்தை வைத்து எடுத்து வருகிறார். இதனை பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்குகிறார்.
இந்த படத்தின் பெயர் சஸ்பென்ஸாகவே இருந்து வந்த நிலையில், 2021 புத்தாண்டை ஒட்டி தலைப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, படத்துக்கு "அந்தகன்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.