தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

டைட்டானிக் காதலும் கவுந்து போகும் ரிலீஸ் தேதி அறிவிப்பு - நடிகர்கள் கலையரசன், காளி வெங்கட்

காதலும், காமெடியும் கலந்த 'டைட்டானிக் காதலும் கவுந்து போகும்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

titanic
titanic

By

Published : Feb 7, 2021, 8:16 PM IST

ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட், ஜாங்கிரி மதுமிதா, ராகவ் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்’. சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இயக்குநர் பாலாஜி மோகனும், நடிகை காயத்ரியும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ளது. பள்ளிப் பருவ காதல், கல்லூரி காதல், வேலைக்கு செல்லும்போது வரும் காதல், திருமணத்திற்கு பின்பான காதல் என நான்கு விதமான காதல் கதைகளை மிக சுவாரசியமாக சொல்ல முயற்சித்துள்ளார் அறிமுக இயக்குநர் ஜானகிராமன்.

அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலர் கலகலப்பாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு பணிகள் முடிந்தி ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், கரோனா பாதிப்பால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றது.

தண்ணீரில் மூழ்காத டை்டானிக் கப்பல்

இதனால் பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில், டைட்டானிக்: காதலும் கவுந்து போகும் திரைப்படம் வருகின்ற 26ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கரோனா காலத்தில் வீட்டில் முடங்கி கிடந்த ரசிகர்களுக்கு இப்படம் புது அனுபவத்தை தரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:"களத்தில் சந்திப்போம்" வெற்றி களிப்பில் மஞ்சிமா மோகன்!

ABOUT THE AUTHOR

...view details